இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்கிறது. இந்தப் போட்டிகள் எதிர்வரும் 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.
அயர்லாந்து தொடரை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஜூலை 1, 4, 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் விளையாடவுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில் 15 வயதான இடதுகை தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். இளம் வயதிலேயே தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ள அவர், இந்தத் தொடரின் மூலம் இந்திய அணிக்காக T20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அடுத்ததாக வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் மற்றும் 23 வயதான சகலதுறை வீரர் சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.