தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் பலரும் சமூக வலையத்தளங்களில் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் "இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள், என் பாடலைக் கலைசெய்த என் தமிழுக்கு நியாயம் செய்த ஒரு கலைஞன் தமிழ்நாட்டு முதலமைச்சராய் பிறந்தநாள் காண்பது பெருமை தருகிறது. குன்றாத உடல் நலத்தோடும் குன்றுபோல மனவளத்தோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என வாழ்த்தியுள்ளர் கவிஞர் வைரமுத்து.