பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது இயக்குனர் ஷிவ் ராவில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பலிம்ஸ் இந்தத் திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ஆல்பா’ திரைப்படம், சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த மாதம் 3-ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்தத் திரைப்படத்தின் Teaser வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.