நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பின் அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் பார்த்திபன் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.
விஜய்க்கு பரிசாக ஒரு ஓவியம் ஒன்றை நடிகர் பார்த்திபன் வழங்கியுள்ளார் . அந்த ஓவியத்தில் "சினிமாயணம் To CMஆசனம்" என விஜய்யை பாராட்டி சில வரிகளையும் பார்த்திபன் எழுதி இருக்கிறார்.
மோசமான நிலையில் இருக்கும் சினிமா துறையை காப்பாற்ற பல நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் எடுக்க வேண்டும் என சினிமா பிரபலங்கள் பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.