தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, இரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படுகிறார்.
அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, ரவி தேஜா தற்போது தனது 77-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘இருமுடி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.