24 Views
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவான 'அரசன்' திரைபடத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கின்றார்.
வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 'அரசன்' திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்புக்களும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.