2012ஆம் ஆண்டு வெளிவந்த “லீலை” திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஷிவ் பண்டிட். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகின்றார்.
இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
“தமிழ் சினிமா எனக்கு எப்பொழுதுமே நெஞ்சிற்கு நெருக்கமானது. லீலை திரைப்படம் மூலம் தமிழ் மக்கள் எனக்குத் தந்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
‘சிக்மா’ திரைப்படத்தின் ஊடாக கோலிவுட்டில் எனது பயணத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பமாகும் என்று நம்புகின்றேன். ஜேசன் சஞ்சய் போன்ற தெளிவான பார்வையைக் கொண்ட ஓர் இளம் இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், யோக் ஜப்பி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமனின் இசையமைப்பிலும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள “சிக்மா” திரைப்படம், இம்மாதம் 31ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.