133 Views
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 2
கடலை மா - 1 கப்
அரிசி மா - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை எண்ணெய்
உப்பு
செய்முறை
முதலில் வெங்காயம் மென்மையாகும் வரை நன்றாக கைகளால் பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர், பிசைந்த வெங்காயத்தோடு கடலைமா, அரிசி மா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ,சிறிதளவு தண்ணீர் தெளித்து பக்கோடா மாவாக பிசையவும்.
பிறகு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேவையான அளவு பக்கோடா மாவை போடவும்.
இறுதியாக வெங்காய பக்கோடா பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.