'இசைஞானி' இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.மேலும் வெங்கட் பிரபுவின் கதையில், யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் கதைப் பகுதியை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு எழுதியுள்ள நிலையில், திரைப்படத்திற்கான திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என் சுப்ரமணியம் மேற்கொள்கிறார்.
இசைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வாரிசு நடிப்பில் களம் இறங்குவதால், இந்த ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடம் இப்போதே தொடங்கியுள்ளது.