நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கடந்த 2015ஆம் ஆண்டு சகாப்தம் என்ற திரைப்படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மதுர வீரன், படைத்தலைவன், கொம்பு சீவி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். கடந்த வருடம் வெளியான இத்திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
கொம்பு சீவி திரைப்படத்தினை தொடர்ந்து சண்முக பாண்டியன் தற்போது நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சண்முக பாண்டியன் இயக்குநர் புகழ் திரு இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள சக நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.