ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகும்.
இந்த ஆண்டு, குடியரசுத் தலைவர் ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் உட்பட 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளின் இரண்டாம் கட்ட விழா, ஜூன் 23ம் திகதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் இந்தியத் திரையுலகின் ஒரு மாபெரும் ஆளுமையாக வலம் வரும் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி பத்ம பூஷன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் நடிகரும் திரைப்பட இயக்குனருமான ஆர். மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.