Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
Facebook இல் இலவச verified அடையாளச்சான்று அறிமுகம்!

SOORIYAN GOSSIP - Facebook இல் இலவச verified அடையாளச்சான்று அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views

​செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி கணக்குகள் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மெட்டா நிறுவனம் facebook பயனர்களுக்கான புதிய இலவச Facebook Verified எனும் அடையாளச் சான்றளிக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் AI கணக்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்கள் தொடர்பு கொள்ளும் கணக்கின் பின்னணியில் இருக்கும் நபர் உண்மையானவரா என்பதை உறுதிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

​இந்த புதிய நடைமுறையின் கீழ் பயனர்கள் தங்களின் கணக்கைச் சரிபார்க்கக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

மாறாக, பயனர்கள் வழங்கும் ஒரு சில வினாடிகள் கொண்ட Video Selfie காட்சி பெறப்பட்டு, அது அவர்களின் profile படங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும்.

இச்செயல்முறை பூர்த்தியடைந்ததும், அவர்களது சுயவிவரப் பக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு 'டிக் மார்க்' வழங்கப்படவுள்ளது.

​அமைப்பின் பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் 18 வயதிற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கவிருக்கும் இந்த அம்சம், facebook profile மட்டுமன்றி Dating, marketplace மற்றும் groups போன்ற பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்படும்.

முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் பயன்பாட்டிற்கு வரும் இந்த அம்சம், விரைவில் உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top