பரத் தர்ஷன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் திருவீர் நடிப்பில் 'ஓ சுகுமாரி' திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் ஜான்சி, விஷ்ணு, ஆமணி, முரளிதர் கௌட், ஸ்ரீநிவாஸ் காவிரெட்டி, கோட்டா ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு , பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார் என்பதுடன் இது ஒரு கலகலப்பான மற்றும் மாறுபட்ட பாணியில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும்.
இத்திரைப்படம் ஜூலை 17ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது மேலும் இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.