இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படம் 'மண்டாடி'.
இத் திரைப்படத்தில் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில் மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
இத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது.
இத் திரைப்படம் September மாதம் 4ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.