சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாய் அபயங்கரின் இசையும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
கடந்த May மாதம் 15ஆம் திகதி வெளியான இத்திரைப்படம் நாளுக்கு நாள் வசூலை அள்ளி குவித்துக்கொண்டிருக்கின்றது .
இந்நிலையில் கருப்பு திரைப்படம் வெளியாகி 26 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் 330 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இனி வரும் நாட்களிலும் கருப்பு திரைப்படம் நல்ல வசூலை குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.