31 Views
காலை நேரத்தில் 10–15 நிமிடங்கள் இதமான சூரிய ஒளியில் இருப்பது, உடலுக்கு தேவையான விற்றமின் D இயற்கையாக உருவாக உதவும் .விற்றமின் D ,உடலில் கல்சியம் உறிஞ்சப்படுவதற்கு துணைபுரிவதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசை செயல்பாட்டை மேம்படுத்தவும் பங்களிப்புச் செய்யும்.
காலை சூரிய ஒளி உடலின் உயிரியல் கடிகாரத்தை (Body Clock) சீராக வைத்திருக்க உதவுவதால், இரவில் நல்ல தூக்கம் வரவும் உதவும்.
ஆனால் மதிய நேரத்தின் கடுமையான வெயிலில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்து, காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான மிதமான சூரிய ஒளியைத் தேர்வு செய்வது சிறந்தது.