அன்றாடம் எமது வாழ்க்கை முறையில் சில முக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடித்தோமேயானால் உடலைப் பலவீனப்படுத்தும் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், இதய ஆரோக்கியம் என்பது எமது உடலுக்கு முக்கியமானதொன்றாகும். பெரும்பாலும் அதிகாலை நேரத்திலேயே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே, இதய நோய்களிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள, காலை நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான 5 விடயங்களைப் பற்றிப் பார்க்கலாம்...
● இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதற்குக் காலை நேரத்தில் போதுமான நீர் அருந்துவது சிறப்பானதாகும்.
● காலை உணவைத் தவிர்க்காமல் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
● இதயத்திற்குத் திடீர் அழுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, காலை நேரத்தில் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
● உப்பு மற்றும் கலோரி அதிகளவில் சேர்க்கப்பட்ட துரித உணவுகளைக் காலையில் உட்கொள்வதைத் தவிர்த்தல்.
● தினமும் காலையில் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது அவசியமாகும்.