94 Views
பலருக்கு சூடான தண்ணீரில் முகம் கழுவுவது புத்துணர்ச்சியாகத் தோன்றும்.
மிகவும் சூடான தண்ணீர், சருமத்தில் இயற்கையாக இருக்கும் பாதுகாப்பு எண்ணெய்களை குறைத்து, சருமத்தை வறண்டு போகச் செய்யும்.
இதனால் சிலருக்கு இறுக்கமாக உணர்வது, எரிச்சல் அல்லது அதிக வறட்சி ஏற்படும்.குறிப்பாக உணர்திறன் அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள் இதை கவனிக்க வேண்டும்.
முகத்தை வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரில் கழுவுவது சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். அதன்பின் உங்கள் சருமத்திற்கு ஏற்ற moisturizer பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.