33 Views
சில மோசடி கும்பல்கள் WhatsApp ஊழியர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் போல பேசி, "உங்கள் கணக்கில் பிரச்சினை உள்ளது" அல்லது "பாதுகாப்பு சரிபார்ப்பு அவசியம்" என்று கூறி பயனர்களை ஏமாற்றுகின்றனர். மேலும், வீடியோ அழைப்புகள் மூலம் தனிப்பட்ட காட்சிகளை பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்ப்பது, OTP அல்லது சரிபார்ப்பு குறியீடுகளை யாரிடமும் பகிராமல் இருப்பது, வாட்ஸ்அப்பில் Two-Step Verification வசதியை இயக்குவது மற்றும் சந்தேகத்திற்கிடமான கணக்குகளை உடனடியாக Block மற்றும் Report செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.