ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கண்டுகளிப்பார் என்பதையும் அத்துடன் நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அவர் பங்கேற்பதையும் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
48 நாடுகள் கலந்து கொண்ட 23ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் இணைந்து நடத்துகின்றன. கால் இறுதி ஆட்டங்களில் இருந்து போட்டிகள் அமெரிக்காவில் மட்டும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.