54 Views
மெலிதான வெள்ளிச் சங்கிலியில் சிறிய முத்துக்கள், கற்கள் அல்லது இதயம், பட்டாம்பூச்சி போன்ற குட்டி டொலர்கள் போன்ற டிசைன்கள் ஜீன்ஸ், குர்தி போன்ற நவீன ஆடைகளுக்கு மிக கச்சிதமாகப் பொருந்துகின்றன. இதை பெண்கள் அதிகம் விரும்பி அணிகிறார்கள்.
முன்பெல்லாம் கொலுசு என்றாலே சத்தம் வர வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது சத்தமில்லாத, அதே சமயம் பளபளக்கும் மல்டி-கலர் கற்கள் மற்றும் சிறிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட கொலுசுகளைப் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
கொலுசு அணிவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, அதன் பின் அறிவியல் பூர்வமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. காலில் வெள்ளி நகைகளை அணிவது உடலில் உள்ள நேர்மறை ஆற்றலை தக்க வைக்க உதவுகிறது என்றும், இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.