இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் 8,000 என்ற இமாலய ஓட்டங்களை கடந்துள்ளனர்.
இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 9வது ஜோடியாகவும், இந்தியாவின் 3வது ஜோடியாகவும் அவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த வரலாற்றுச் சாதனையை அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது பதிவு செய்தனர்.