இந்த ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடரில் வெறும் 33 போட்டிகளிலேயே மொத்தமாக 100 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
சுவீடனுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ அடித்த கோல், 100ஆவது கோலாக பதிவானது. இதன் மூலம் கடந்த 68 ஆண்டுகளில் மிக குறைந்த போட்டிகளில் 100 கோல்கள் அடிக்கப்பட்ட உலகக்கிண்ண தொடர் என்ற புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ வீரர் ஜுலியன் குய்னோனஸ் இந்தத் தொடரின் முதல் கோலை பதிவு செய்தார். அந்த போட்டியில் மெக்சிகோ அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
1954ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத்தில் வெறும் 20 போட்டிகளிலேயே 100 கோல்கள் அடிக்கப்பட்டிருந்தன. அந்தத் தொடரில் ஜெர்மனி கிண்ணத்தை கைப்பற்றியமைக் குறிப்பிடத்தக்கது.