60 Views
இந்த முக்கியத்துவம் வாய்ந்த 50 ஓவர் போட்டி தொடர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. முன்னதாக 2003இல், தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் 8ஆவது ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரை நடத்தின.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், தென்னாப்பிரிக்காவின் எட்டு நகரங்கள், சிம்பாப்வேயின் மூன்று நகரங்கள் மற்றும் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் ஆகியவை இப்போட்டித் தொடரின் இணை நடத்துநர்களாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் ,24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புகழ்பெற்ற போட்டி தொடர் மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு வருவது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.
இப்பகுதியின் தனித்துவமான பண்புகளான விருந்தோம்பல், ஆர்வம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகியவை மறக்க முடியாத ஒரு நிகழ்வை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெறும். புதிய மூன்று கட்ட வடிவத்தின் மூலம் போட்டிகள் அதிக முக்கியத்துவம் மற்றும் விறுவிறுப்புடன் நடத்தப்பட்டு, இரசிகர்களின் அனுபவம் மேம்படுத்தப்படும்.
'சூப்பர் சீரிஸ்' சுற்றில், தரவரிசையில் 12 முதல் 14-ஆவது இடங்களில் உள்ள மூன்று அணிகள் 'சுழற்சி முறையில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். மொத்தம் 30 போட்டிகளை கொண்ட இந்த சுற்றில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 'சுழற்சி முறையில்' விளையாடும்.
ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளும், அத்துடன் இரு குழுக்களிலும் அடுத்த சிறந்த நிலையில் உள்ள அணியும் 'சூப்பர் 7' சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 7' சுற்றில் 21 'சுழற்சி முறை' போட்டிகள் நடைபெறும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அரையிறுதியில், 'சூப்பர் 7' சுற்றில் முதலிடம் பிடித்த அணி நான்காம் இடத்தை பிடித்த அணியுடனும், இரண்டாம் இடம் பிடித்த அணி மூன்றாம் இடம் பிடித்த அணியுடனும் மோதும்.