பருக்கள் என்பது இளம் வயதினர், 20 மற்றும் 30 வயதுகளில் இருப்போர் என பலரும் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான சரும பிரச்சனைகளில் ஒன்றாகும். கடும் முகப்பரு பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும் சில ஆயுர்வேத மூலிகைகள் இருக்கின்றன .
நெல்லிக்காய்: விட்டமின் C-யின் சிறந்த மூலமாக இருக்கும் நெல்லிக்காய் முகப்பரு மற்றும் பருக்கள் போன்ற தீவிர சருமப் பிரச்சனைகளுக்கு நிவாரணமளிக்க மிகவும் நல்லது.
வேம்பு: வேம்பில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தும் பண்புகளால், இது முகப்பரு பிரச்சனைகளைக் குறைக்கின்றது.
கற்றாழை: சருமப் பராமரிப்பில் (Aloe Vera) எனப்படும் சோற்றுக்கற்றாழை முகப்பருவை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் பல வழிகளில் உதவுகிறது. முகப்பரு பிரச்சனைகளை குறைக்க கற்றாழை உதவுகிறது.