83 Views
சுத்தமான பருத்தித் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, தினமும் 3 முதல் 4 முறை, 10-15 நிமிடங்கள் கட்டியின் மீது ஒத்தடம் கொடுக்கவும். இது கட்டியில் உள்ள கழிவை வெளியேற்றி வலியைக் குறைக்கும்.
கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். லேசான பேபி ஷாம்பு கொண்டு கண்களை மென்மையாக சுத்தம் செய்யலாம்.
கட்டியை நீங்களாக உடைக்கவோ, அழுத்தவோ கூடாது, இதனால் தொற்று மற்ற இடங்களுக்கும் பரவும்.
கண் கட்டி மறையும் வரை ஐ-லைனர், மஸ்காரா போன்ற ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.
லென்ஸ்கள் அணிவதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாகக் கண்ணாடிகளை அணிவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.