54 Views
தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சூரி.
இவர் "வெண்ணிலா கபடி குழு', ' ஜில்லா', 'வேதாளம்' 'அண்ணாத்த' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இரசிகர்கள் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்தவர்.
தற்பொழுது இயக்குநர் மதிமாறன் புகழ் இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படம் “மண்டாடி”
இத் திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாகவும் சுகால் சத்யராஜ், ரவீந்தரா விஜய், நமீதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு G.V பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.