இன்றைய நவீன உலகில் AI தொழில்நுட்பங்களின் பயன்பாடு எம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்நிலையில், AI கருவிகளை அதிகமாகப் பயன்படுத்துவது மனிதர்களுக்கு ஞாபக மறதியை ஏற்படுத்துமா என்ற கேள்வி உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்திய சர்வதேச அறிவியல் ஆய்வுகள் இந்த கேள்விக்கு ஆம் என்றே பதிலளித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, AI தொழில்நுட்பங்களின் அதீத பயன்பாடு மனித மூளையில் Cognitive என்ற நிலையை ஏற்படுத்துகிறது. தற்போதைய AI கருவிகள் வெறும் தகவல்களைத் தருவதோடு நிற்காமல், மனிதர்களைப் போல சிந்திப்பதால் மனித மூளைக்கான வேலை முற்றிலும் குறைந்து போகிறது.
AI தொழிநுட்பத்திற்கு பழகிய மனிதர்கள் ஒரு சிக்கலைத் தீர்க்க மூளையை உபயோகிக்காமல் மிக விரைவாகவே தங்களின் முயற்சியைக் கைவிடுகின்றனர். உடற்பயிற்சி செய்யாத தசை எப்படி வலுவிழந்து போகுமோ அதேபோல சிந்திக்கும் பயிற்சியை நிறுத்திக் கொண்டால் மனித மூளையும் தன் திறனை இழந்துவிடும் என்பதே உண்மை.
கடினமான பணிகளை மூளைக்குக் கொடுத்து பழகிய பிறகே சரிபார்ப்பதற்கு மட்டும் AI தொழிநுட்பத்தை பயன்படுத்துவதே இத்தகைய Digital ஞாபக மறதியில் இருந்து எங்களை காத்துக்கொள்ள ஒரே தீர்வாகும்.