தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள எஸ். ஜானகி அம்மா தனது 88 வயதில், வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.
இவர் 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்.
இந்நிலையில், கர்நாடகாவின் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று பொதுமக்கள், இரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படவுள்ளது.
அதன்பின், பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.