64 Views
நோர்வே அமெரிக்க நிறுவனமான 1X, நியோ என்ற மனித வடிவிலான ரோபோவை உருவாக்கியுள்ளது. இது மனித கரங்களின் நெகிழ்வுத்தன்மையைப் போன்று இயங்கி, அன்றாட வீட்டு வேலைகளைத் துல்லியமாகச் செய்கிறது.
மனிதக் கைகளின் நெகிழ்வுத்தன்மையை அப்படியே நகலெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நியோ ரோபோவின் கைகள், அன்றாட வீட்டு வேலைகளை மிக துல்லியமாக செய்வது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
நியோ ரோபோ இன்னும் 100% தானியங்கியாக மாறவில்லை. சிக்கலான பணிகளைச் செய்ய 'Expert Mode' என்ற வசதியை 1X வழங்குகிறது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மனிதர்கள், ரோபோவில் உள்ள கேமராக்கள் வழியாக அதற்கு தூரத்திலிருந்து உதவ முடியும்.