100 Views
பல சந்தர்ப்பங்களில், ஒற்றைத் தலைவலி தொடங்கும் முன் ஒரு நபர் சில எச்சரிக்கை அறிகுறிகளை அனுபவிக்கலாம். இது முக்கியமாக பெண்களைப் பாதிக்கிறது.
இது ஒரு மந்தமான வலியாகத் தொடங்கலாம், அது மெதுவாக அதிகரித்து தலைவலி குமட்டல் மற்றும் வாந்தியுடனான உணர்வினை ஏற்படுத்துகின்றது.
ஒற்றைத் தலைவலி தாக்குதலின் போது ஒரு நபர் மங்கலான பார்வையை உணரலாம்
வழக்கமாக, ஒற்றைத் தலைவலியானது உணவைத் தவறவிடுவது, தூக்கமின்மை, நீண்ட பயணம், மன அழுத்தம், காஃபின் அல்லது மாதவிடாய் போன்றவற்றால் தூண்டப்படுகிறது.
இஞ்சி ஒற்றைத் தலைவலிக்கு எதிராகச் செயற்படும் முக்கிய பொருளாகும். ஒரு கப் தண்ணீரில் சிறு துண்டு இஞ்சியைத் தட்டிப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கலாம்.
ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, கழுத்தின் பின்புறம் அல்லது நெற்றியில் 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுப்பதாலும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.