2015 இல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் பிரேமம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய சினிமாவிலேயே தனி அந்தஸ்து இத்திரைப்படத்திற்கு உண்டு. சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் போன்றோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்11 ஆண்டுகள் கழித்து அல்போன்ஸ் புத்திரன் - நிவின் பாலி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
திரைப்படத்தின் பெயர் வருகிற ஜூன் 27 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது என்பதுடன் இது, நிவின் பாலியின் 50வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.