நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து இந்திய மதிப்பில் ரூ. 3,100 கோடி வசூலித்து மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்திருந்தன.
இத்திரைப்படங்களுக்காக ரன்வீர் சிங் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'துரந்தர்' திரைப்படத்தின் வசூலில் கிடைக்கும் இலாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ரன்வீர் சிங் மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ. 325 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார்.
இதனடிப்படையில் தற்போது இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ரன்வீர் சிங்.