இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் 55-ஆவது திரைப்படத்திற்கு ஓம்: அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு வீடியோவை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் தனுஷுடன் மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி மற்றும் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர் என்பதுடன் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் .
மேலும் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் திரைப்படத்தை தயாரிக்கிறது மேலும் ஒக்டோபர் 16ம் திகதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.