வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் கிருத்திகா உதயநிதி. தற்போது இவர் மற்றுமொரு புதிய திரைப்படமொன்றை இயக்கவுள்ளார்.
அந்த வகையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி இதுவரை தனது சினிமா வாழ்க்கையில் நடிக்காத வித்தியாசமான கதைக்கருவோடு இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பொழுதும் தனித்துவமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி, இந்த திரைப்படத்தின் மூலம் புதிய கூட்டணியில் இணையவுள்ளதால் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.