198 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் இவர் , சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் எடுத்த முக்கிய முடிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர், “2023-ஆம் ஆண்டோடு சினிமாவுக்கு Goodbye சொல்ல நினைத்தேன். ஆனால் விதி என்னை எதிர்பாராத பாதையில் அழைத்துச் சென்றது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நிவேதா பெத்துராஜ், “சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் என்னை விதி கொண்டு வந்து சேர்த்தது. என்னை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்ததற்காக இயக்குநர் நாக் அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றி. நாக் அஸ்வின் மட்டும் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்காவிட்டால், இந்நேரம் நான் இமயமலைக்கு சென்றிருப்பேன்” என்று கூறியுள்ளார். நிவேதா பெத்துராஜின் இந்த பேச்சு இரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.