சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
மழையினால் பாதிக்கப்பட்ட குறித்தப் போட்டி 25 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் கில் தெரிவானார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி லக்னோ மைதானத்தில் இடம் பெறவுள்ளது.