அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அவுஸ்திரேலியா சார்பாக மெத்யூ ஷோர்ட் 55 ஓட்டங்களையும் மெட் ரென்ஷோ 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்கு 201 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 42.3 ஓவர்களில் 205 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பாக பாபர் அசாம் 69 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.