இயக்குநர் H.வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு முன்னதாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. தணிக்கை தொடர்பான சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீடு இதுவரை தாமதமாகியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளதால், ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனவும் இந்திய சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விஜய்யின் பிறந்தநாள் June 22ஆம் திகதி வருவதால், அதற்கு முன்பாக June 19ஆம் திகதி ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடலாம் எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
June 19ஆம் திகதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால், விஜய் இரசிகர்களுக்கு இது இரட்டை கொண்டாட்டமாக அமையும்.