ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி நான்கு கதைகளுடன், ‘மூன்றாம் கண்.’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படம் வருகிற ஜூன் 12 ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி மூன்றாம் கண் திரைப்படக்குழு கலந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விதார்த்,
இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் அவர்களை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை திரைப்படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் அவர்கள் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்தார்.