இயக்குநர் அமீரின் ‘யோகி’ திரைப்படம் மூலம் இரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் யோகி பாபு.
இதனை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென இரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் யோகிபாபு நடிக்கும் 300ஆவது திரைப்படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படம் June மாதம் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.