ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் திகதி வெளியான திரைப்படம் 'கருப்பு'.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ. 207 கோடி வசூலைத் தாண்டியதாக திரைப்படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'கருப்பு' திரைப்படம் வசூலில் இந்திய மதிப்பில் ரூ. 300 கோடியை கடந்துள்ளதாக திரைப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை நெருங்கும் 'கருப்பு' திரைப்படம் வசூலில் மேலும் பல கோடிகளை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.