'96’, 'மெய்யழகன்' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் C. பிரேம்குமார் இயக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திரைப்படம் ஒரு திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதில் பகத் பாசில் மற்றும் ஷிவதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
வடிவேலுடன் நடித்த 'மாரீசன்' படத்திற்குப் பிறகு, பகத் பாசில் தமிழில் தனி ஒரு நாயகனாக நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இதுவாகும்.
இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.