தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
தற்போது அவர் தனது 158-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்காலிகமாக ‘மெகா 158’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் 'பாபி 'இயக்குகிறார்.
ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இது அவர்களது இரண்டாவது படமாக அமைந்துள்ளது.
அப்பா-மகள் உறவை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையின் ‘மெகா 158’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.