நடிகர் அஜித் தொடர்பான 'கிளாடியேட்டர்ஸ்' என்ற ஆவணப்படம் வரும் ஓகஸ்ட் மாதம் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளதுடன், இசையை ஜி.வி.பிரகாஷ் அமைத்துள்ளார்.
அஜித்தின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப்படம், இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணப்படத்தின் வெளியீட்டுத் திகதி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.