தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'இசைஞானி' இளையராஜா இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது இளையராஜாவின் திரையுலக பயணத்தில் 1540-வது திரைப்படமாகும்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 திரைப்படங்களில், 'பேட்ட' திரைப்படத்தைத் தவிர மற்ற 8 திரைப்படங்களுக்கும் சந்தோஷ் நாரயணனே இசையமைத்திருந்தார்.
இருப்பினும், தனது திரைப்படங்களில் இளையராஜாவின் கிளாசிக் பாடல்களையோ அல்லது அவரது பின்னணி இசையையோ ஏதேனும் ஒரு முக்கிய காட்சியில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாக வைத்திருப்பார். ஆனால், தற்போது முதன்முறையாக இளையராஜாவையே தனது திரைப்படத்திற்கு முழுமையாக இசையமைக்க வைத்துள்ளார்.