Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
'துருவ நட்சத்திரம்’ வெளியீடு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

SOORIYAN GOSSIP - 'துருவ நட்சத்திரம்’ வெளியீடு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலமாக வெளிவராமலிருந்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், நிதிப் பற்றாக்குறை மற்றும் தயாரிப்பாளர்களுடனான சட்டப் போராட்டங்கள் காரணமாக பல வருடங்களாகத் தள்ளிப்போனது. முன்னதாக, ஜூன் 15ஆம் திகதிக்குள் திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், குறிப்பிட்ட திகதிக்குள் நிதிச் சிக்கல்களை முழுமையாகத் தீர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் கூடுதலாக அவகாசம் கேட்டு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று, துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட ஜூலை 31 வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஹரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஓகஸ்ட் மாதத்திற்குள் திரைப்படம் வெளிவரும் என்று இரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top