கடந்த மாதம் ரவி மோகன் செய்தியாளர்களுக்கு ஆதங்கத்துடன் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக, ஆர்த்தி உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவிமோகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த, பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தம் தெரிவிப்பதாகவும் , மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.