நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கில்லர்’. இப்படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்று படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் படம் இதுவாகும்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் சிறு காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.