சர்வதேச கிரிக்கெட் பேரவை, இன்று ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்தியா 118 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து 113 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 98 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.